நெல்லை:
நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தவறாக சித்தரித்து, வன்முறையை தூண்டும் விதத்தில் செயல்படுகிறவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிந்துபூந்துறை கட்சி அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் போக்குவரத்து கிளை சங்க செயலாளர் உலகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கினாார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சிவசாமி முன்னிலை வகித்தார். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், அயூப்கான், சுப்பையா, அருண் சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கருவேலன்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுகுமாரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய துணை செயலாளர் பால்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன், திருமணி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி நகர சி.ஐ.டி.யு சார்பில் தினசரி சந்தை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எம்.கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் சுடலைமுத்து உள்பட 6 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் ஸ்டீபன், கிறிஸ்டன், பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.