இந்த நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே ஏற்பட்டுள்ள தகவல் பரிமாற்ற பிரச்சனை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகக்குழு இன்று ஐதராபாத்தில் ஆலோசனை நடத்துகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருடன் நிர்வாகக்குழு ஆலோசனை நடத்துகிறது.
கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது கூறிய குற்றச்சாட்டு குறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாக குழு விவாதிக்கிறது. தேர்வு குழுவினரிடம் இதுகுறித்து நிர்வாகக் குழுவினர் கேள்வி எழுப்புவார்கள். அதோடு அணி நிர்வாகத்திடமும் (ரவிசாஸ்திரி, கோலி) விளக்கம் கேட்பார்கள்.
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு அணியை தயார் செய்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும். கூடுதலான பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொள்ளும். இதேபோல் வீரர்கள் நடத்தை விதிமுறை, ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.