செய்திகள்

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் பூனம் யாதவ்

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். #CWG18 #PunamYadav

ஆஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடந்து வருகிறது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கனவே, இந்தியா இதுவரை 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. #CommonwealthGames #CWG18 #GC2018Weightlifting #PunamYadav

SCROLL FOR NEXT