செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் மனு பகேர் தங்கம் வென்றார், ஹீனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் இன்று நடந்த 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். #CWG18

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடந்த மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர்.

முன்னதாக பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது. #CWG18 #ManuBhaker #HeenaSidhu

SCROLL FOR NEXT