கோல்ட் கோஸ்ட்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 11-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.
கடைசி நாளான இன்று பேட்மிண்டன் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி - சிராக் சந்திரசேகர் ஜோடி, இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ் - கிறிஸ் லேன்கிரிட்ஜ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இங்கிலாந்து ஜோடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதுவே இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு கிடைக்கும் கடைசி பதக்கமாகும். இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது. #CWG2018 #CWGBadminton #ChiragChandrashekhar #SatwikRankireddy