செய்திகள்

காமன்வெல்த் பேட்மிண்டன் - மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. #CommonWealthGames2018 #CWG2018

கோல்ட் கோஸ்ட்:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா - குரோன்யா சோமர்வில்லே ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது. 

இதன்மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #AshwiniPonnappa #SikkiReddy

SCROLL FOR NEXT