காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் அணிக்கான டேபிள் டென்னிஸ் காலிறு ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் சுற்றில் மணிகா பத்ரா மலேசியாவின் யிங் ஹோவை எதிர்கொண்டார். இதில் மணிகா பத்ரா 11-9, 11-7, 11-7 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது சுற்றில் மதுரிகா பத்கர் கரேன் லினேவை எதிர்கொண்டார். இதில் மதுரிகா 7-11, 11-9, 11-9, 11-3 என வெற்றி பெற்றார்.
3-வது சுற்றில் மவுமா தாஸ் - மதுரிகா பத்கர் ஜோடி, ஐ ஜின் டீ - யிங் யோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 11-8, 12-10, 11-8, 11-7 என வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என வெற்றி பெற்று இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.