இரண்டாயிரம் பாதுகாப்பு படையினருடன் 3500 போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் போர் விமானம், ட்துரான் எதிர்ப்பு துப்பாக்கியும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.
நேற்று பிரிஸ்பேனில் வீட்டில் தயாரிக்கப்படும் கையெறி குண்டு காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் குண்டு தயாரித்ததாக ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.