வெடிகுண்டு வீச்சு 
செய்திகள்

தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீச்சு - கமிஷனர் நேரில் ஆய்வு

சென்னை தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வெடித்த இடத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சென்னை:

சென்னையில் உள்ள தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே இன்று மாலை நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அக்கம் பக்கத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீச்சு நடந்த இடத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெடிகுண்டு வீச்சு நடைபெற்றது குறித்து விசாரணை நடத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT