செய்திகள்

டெல்லிக்கு வாருங்கள்- ரங்கசாமியிடம் பிரதமர் மோடி அழைப்பு

புதுவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். #pmmodi #rangasamy

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்- அமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.

அப்போது ரங்கசாமி பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்தார். உடனே ரங்கசாமி தோளில் தட்டிய மோடி நீங்கள் ஏன் டெல்லிக்கு வருவதில்லை. டெல்லிக்கு வாருங்கள் என்று கூறினார். அதற்கு ரங்கசாமி சிரித்து கொண்டே நான் வருகிறேன் என்று கூறினார்.

ரங்கசாமியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர். செல்வம், திருமுருகன், அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே. ஜெயபால், சுகுமாறன், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோரும் பிரதமரை வரவேற்க சென்றிருந்தனர். #tamilnews #pmmodi #rangasamy