செய்திகள்

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து - பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடத்தை உருவாக்கி வருகிறது.
 

இந்த கட்டிடத்தின் 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 22ம் தேதி வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒட்டுமொத்த கட்டிடமும் சில நொடிகளில் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.