திண்டிவனத்தில் அரசு கலை கல்லூரி மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்த காட்சி. 
செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு- திண்டிவனத்தில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திண்டிவனத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதேபோல் திண்டிவனம் மேல்பாக்கத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று போராட்டம் செய்தனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடித்தது. கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த ரோசணை போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

SCROLL FOR NEXT