தற்கொலை செய்து கொண்ட மாணவர் 
செய்திகள்

பெருங்குடியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவர் தற்கொலை

பெருங்குடியில் ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

பெருங்குடி கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (20). சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜின் நண்பரிடம் விசாரித்தனர். அவர் கூறும் போது, ஜெயராஜ் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார்.

நேற்று தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் காதலை அப்பெண் ஏற்காததால் அவர் மனம் வேதனையில் இருந்தார்.

இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக நண்பர் போலீசில் தெரிவித்தார்.