விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் கோகிலா (வயது 20). இவர் திருநாவலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரும், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த குமரேசன் (27) என்பவரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது.
2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது குமரேசன், திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி கோகிலாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில் கோகிலா கர்ப்பமானார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதைத் தொடர்ந்து கோகிலா காதலன் குமரேசனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.
அப்போது குமரேசன் தனக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்தார். மேலும் கோகிலாவுடனுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார்.
காதலனை நம்பி ஏமாற்றம் அடைந்த கோகிலா மனம் உடைந்தார். பின்னர் அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த குமரேசனை கைது செய்தார். #tamilnews