செய்திகள்

பெண்களின் வாட்ஸ்-அப் கணக்குகளை ஹேக் செய்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவன் கைது

மராட்டிய மாநிலத்தில் பெண்களின் வாட்ஸ்-அப் கணக்குகளை ஹேக் செய்து அவர்களுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

மும்பை:

மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் குறிப்பிட்ட சில நம்பர்களில் இருந்து ஆபாசமாக மெசேஜ் வருவதாக போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் அளித்தவர்களின் அதிகமானோர் பெண்கள் ஆகும். இது தொடர்பாக, அம்மாநில சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பெண்களுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய புகாரில் ராஜஸ்தான் மாநிலம் பர்மார் மாவட்டத்தைச் சேர்ந்த திப்டேஸ் சலேச்சா (20) என்ற கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்-அப் பயனாளர்களின் கணக்கை உறுதி செய்வதற்காக அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டில் பதிவாகும் எண்களை ஹேக் செய்துள்ள மாணவன், அந்த எண்களுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திப்டேஸ் சலேச்சா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் விசாரணைக்காக ஜூலை 7 வரை

சிறையிலடைக்கப்பட்டார்.