மதுரை:
மதுரை கோச்சடை, டோக் நகர் எஸ்.பி.ஓ.ஏ. காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மனைவி லதா பூரணம் (வயது 55).
இவர் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணிபுரிந்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் 14 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
லதாபூரணம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் மந்தித்தோப்பு ரோட்டில் வசித்து வருகிறார். இவர்களது ஒரே மகன் விபின் (வயது 27). எம்.ஏ. படித்து முடித்துள்ளார். இவர் தாய்-தந்தையுடன் மாறி மாறி தங்கிக் கொள்வார்.
சம்பவத்தன்று காலை மதுரையில் உள்ள தந்தையின் வீட்டில் இருந்து வெளியே சென்ற விபின், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விபினின் தாயார் லதாபூரணம் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான வாலிபரை தேடி வருகிறார்.