செய்திகள்

போடி அருகே கல்லூரி மாணவிக்கு வாலிபர் காதல் தொல்லை

கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தேனி:

ராமநாதபுரம் பொன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவரது மகள் பவித்ரா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் போடி மேலசொக்கநாதபுரத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராகவன் மகன் சசிகுமார் (21). இவர் மதுரையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் ஒரே ஊர் என்பதால் அடிக்கடி சந்திக்க நேரிட்டது.

இதை பயன்படுத்தி சசிகுமார் பவித்ராவிடம் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாக தினமும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி காதல் வலை வீசியுள்ளார். இதற்கு பல முறை பவித்ரா எதிர்ப்பு தெரிவித்தும் சசிகுமார் கேட்காததால் அதிர்ச்சியடைந்தார்.

சம்பவத்தன்று சசிகுமார் பவித்ராவிடம் தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.