கலெக்டர் பிரசாந்த் வடநேரே 
செய்திகள்

குமரிக்கு வருபவர்கள 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர்- கலெக்டர் தகவல்

வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வருபவர்கள 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத் திற்கு வருபவர்கள் 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் கண்டிப்பாக வைக்கப்படுவர். குமரி மாவட் டத்திற்கு வருபவர்கள் ஆரல் வாய்மொழி சோதனை சாவடியில் கொரோனா நோய் தொற்று பரி சோதனைக்கு உட்படுத் தப்பட்ட, பரிசோதனை முடிவுகள் வரும்வரை கன்னியாகுமரியில் நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர்.

மாவட்டத்தில் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இவ்வாறு நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்களுக்கு கன்னியாகுமரி பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் அறை ஒதுக்கீடு செய்யப்படும்.

பிற மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத் திற்கு வருபவர்கள் அரசாணையின்படி 7 நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர். இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அவர்களின் அறைகளிலேயே உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் அறைகளிலேயே தங்கி நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியதும் இரண்டு வாரம் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். நோய் தொற்று உள்ளவர்களை மாவட்டத்திற்கு வெளியே கட்டுப்படுத்துவதால் சுற்றுப் புறத்தில் உள்ள அவரவர் உறவினரும் அவர்களின் நண்பர்களுமே பெரிதும் பயன்பெறுகின்றனர்.

எனவே வெளியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் நிறுவன தனிமைப்படுத்தலில் தங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு வரும் நபர்களுக்கு ஆரல் வாய்மொழி சோதனை சாவடியில் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொண்டதற்கு அடையாளமாக இடது கை சுண்டு விரலில் மை இடப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலை மீறினால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.