அன்னூர் தாலுகா குப்பனூர் கிராமத்தை சேர்ந்த முருகம்மாள் (வயது 96) நேற்று கோவை மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், எனது 12 ஏக்கர் 94 சென்ட் நிலத்தை எனது மகன் அபகரித்து விட்டான். அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி கடந்த ஆண்டு மனு அளித்தேன். அப்போது நடந்த விசாரணையில் திருப்தி இல்லை.
இந்த நிலையில் எனது மகன் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டான். எனவே கலெக்டர் தலையிட்டு விசாரணை நடத்தி எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனு கொடுத்த முருகம்மாள், வழி செலவுக்கு கூட பணமின்றி தவிப்பதாக தெரிவித்தார். உடனே கலெக்டர், மூதாட்டியிடம் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். மேலும் அவர், அந்த மூதாட்டிக்கு ரூ.100 அளித்து உதவி செய்தார்.