சேலம்:
கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி இன்றி (இ-பாஸ்) மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் வந்த 27 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்த 3 பேர், சிவதாபுரத்தை சேர்ந்த 4 பேர், பெரமனூரை சேர்ந்த ஒருவர், 2-வது அக்ரஹாரத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அங்கம்மாள் தெருவை சேர்ந்த ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், சேர்மன் சடகோபன் தெருவை சேர்ந்த ஒருவர், முத்துசாமி தெருவை சேர்ந்த ஒருவர் மற்றும் வித்தியா நகர் 8-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ஒருவர், குமரன் நகரை சேர்ந்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த ஒருவர், பேச்சியம்மாள் நகரை சேர்ந்த ஒருவர், பேச்சியம்மாள் நகர் 4-வது தெருவை சேர்ந்த ஒருவர் மற்றும் செந்தில் நகரை சேர்ந்த 2 பேர், பாண்டுரங்கன்விட்டல் தெருவை சேர்ந்த 2 பேர், பெருமாள் கோவில் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த 2 பேர், சீரங்கன் தெருவை சேர்ந்த 2 பேர், பிரபாத் பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 27 பேர் சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரிய அனுமதி இன்றி (இ-பாஸ்) மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் வந்தது கண்டறியப்பட்டு இந்த 27 பேர் மீதும் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை அலுவலர்களின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு இது போன்று உரிய அனுமதி இன்றி (இ-பாஸ்) மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல் சேலம் மாவட்டத்திற்கு வருபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது போலீசார் மூலம் மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.