செய்திகள்

காங்கயம், தாராபுரத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

காங்கயம், தாராபுரத்தில் வருவாய்த்துறையின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

மாலை மலர்

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 144 பயனாளிகளுக்கு ரூ.39.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

சமூக நலத்துறையின் சார்பில் 10,12 வது படித்தவர்கள் மற்றும் பட்டம், பட்டயம் படித்தவர்கள் என 47 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.20 லட்சத்து 75 ஆயிரமும் தாலிக்கு ரூ.10 லட்சத்து 45 ஆயிரத்து 750 மதிப்பில் 8 கிராம் தங்கமும் மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 71 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி உதவித் தொகையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் விபத்து நிவாரண உதவித் தொகையினையும், 9 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகையினையும், 50 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 அயிரம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 4 பயனாளிகளுக்கு சிறு- குறு விவாசய சான்றிதழ்களும் 1 பயனாளிக்கு இதர பிற்படுத்தபட்டோர் சான்றிதழ்களும், 1 பயனாளிக்கு ஆண் குழந்தை இல்லை என சான்றும், 2 பயனாளிகளுக்கு விதவை சான்றும் மற்றும் 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றும் என 144 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 8 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில், தாராபுரம் வட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சமூக நலத்துறையின் சார்பில் 10, 12-வது படித்தவர்கள் மற்றும் பட்டம், பட்டயம் படித்தவர்கள் என 53 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலி, கல்வி உதவி உள்ளிட்ட 437 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 55 ஆயிரம் 250- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., எஸ். செல்வகு மாரசின்னையன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தாராபுரம் சப்- கலெக்டர் கிரேஸ் பச்சாவு, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் லியாகத், தாசிர்தார்கள் மாணிக்கவேல் (காங்கயம்), சிவக்குமார் (தாராபுரம்) முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.என்.நடராஜ், செல்வி, முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.