விண்ணப்பம் 
செய்திகள்

புலம் பெயர்ந்து திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

புலம் பெயர்ந்து திரும்பிய இளைஞர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்

திருவண்ணாமலை:

துரிஞ்சாபுரம், வந்தவாசி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு மற்றும் தெள்ளார் ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 308 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தொழில் மற்றும் பணி நிமித்தமாக புலம் பெயர்ந்து தற்சமயம் கொரோனாவால் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாக தொழில் கடன் வழங்கப்பட உள்ளது.

இதற்கு தகுதியான திறன் பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அலுவலகங்களை அணுகலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.