கலெக்டர் எஸ்.சிவராசு 
செய்திகள்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்ய ஊக்கத்தொகை- கலெக்டர் தகவல்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. கீரை, கொத்தமல்லி பயிருக்கு எக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையும், தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடி வகை பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.3,750-ம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 எக்டேர் வரை பெறலாம். தனி நபராகவோ, குழுவாகவோ அங்கக சான்று பெற ரூ.500 இதற்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். 

மேலும் தோட்டக்கலை துறை மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் மற்றும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழி எடுத்தலுக்கு எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT