கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்த காட்சி. 
செய்திகள்

அல்லாச்சேரி கிராமத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு

கலவை அருகே அல்லாச்சேரி கிராமத்தில் வசித்து வந்த மக்கள் வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் திவ்யதர்ஷினி அங்கு சென்று ஆய்வு செய்தார்.

மாலை மலர்

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த அல்லாச்சேரி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு பகுதியில் 24 குடும்பங்கள் நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கலவை தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் ராஜலட்சுமி, நில அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.