செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை

கோவை கவுண்டம்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கவுண்டம்பாளையம் நஞ்சக்குட்டி லே-அவுட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சிவா (வயது 20). பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். இந்த நிலையில் அவர் பல இடங்களுக்கு வேலை தேடி சென்றார். ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இதனால் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அவர் கோவை- வடகோவை இடையே உள்ள தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சிவா மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவா தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சிவாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT