திருப்பத்தூர் பூமிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (18).தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்கூரை அமைக்கும் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விஜயகுமார் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.