கோப்புப்படம் 
செய்திகள்

கோவை பூ மார்க்கெட் வளாகத்துக்கு சீல்

பூ, காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கோவை பூ மார்க்கெட் வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

மாலை மலர்

கோவை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையும், அடுத்தபடியாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ஏற்கனவே 211 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பூ, காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கோவை பூ மார்க்கெட் வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

மக்கள் கூட்டம் அதிகரிதது வருவதால் பூ மார்க்கெட் வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.