கோவை:
ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் பற்றியும், டி.டி.வி. தினகரன் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்து இருந்தார். இதனை கண்டித்து இன்று கோவை கோர்ட்டு முன் டி.டி.வி. தினகரன் ஆதரவு வக்கீல்கள் நடிகர் கமல்ஹாசன் உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு தினகரன் ஆதரவு வக்கீல் அணி தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார். இதில் 25-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தினகரன் ஆதரவு வக்கீல்கள் கூறியதாவது-
நடிகர் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் மக்கள் பற்றியும்,டி.டி.வி. தினகரன் குறித்தும் தேவையில்லாமல் பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
இனி வரும் காலங்களிலும் அவர் இவ்வாறு பேசி வந்தால் அவரது படத்தை ஓட விட மாட்டோம். கமல்ஹாசன் தனது படத்தை ஓட வைப்பதற்காக தான் தினகரன் பற்றி பேசி விளம்பரம் தேடி கொள்கிறார். இனியாவது அவர் தினகரன் பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews