கோவை கலெக்டர் ராஜாமணி 
செய்திகள்

உள்ளாட்சி பிரதிநிதிகள் 6-ந்தேதி பதவி ஏற்பு- கோவை கலெக்டர் தகவல்

தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் 6-ந்தேதி காலை 10 மணிக்கு பதவி ஏற்பார்கள் என்று கோவை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019-ல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவி ஏற்கும் நாள் வரும் 6-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கங்களிலும், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திலும் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.