செய்திகள்

கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு வழக்கு- தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench

அண்மையில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (13-ந்தேதி) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.