செய்திகள்

பாகிஸ்தான் படையால் கொல்லப்பட்ட உ.பி.ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல்

பாகிஸ்தான் படையால் சிதைத்து கொல்லப்பட்ட உ.பி.ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல் கூறினார்.

மாலை மலர்

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி பரம்ஜித்சிங், எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் பிரேம் சாகர் ஆகியோரை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் பலியானார்கள்.

அவர்களது உடல்கள் தலை துண்டிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் வீசப்பட்ட கிடந்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பலியான வீரர் பிரேம் சாகர் உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கதறி அழுதனர். அந்த ஊரே சோக மயமானது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆவேசத்துடன் கூறினார்கள்.

மேலும் பிரேம் சாகர் உடலை தகனம் செய்ய விடாமல் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ராணுவ வீரர் பிரேம் சாகர் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களை சமாதானப்படுத்தினார்.