செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்றும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.

இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami