பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை ஜமகண்டியில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டை என்று கூறப்படும் குஜராத்தில் காங்கிரஸ் பலம் கூடியுள்ளது. ஆனால் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்த பல தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அங்கு காங்கிரஸ் வளர்ந்து வருவது நிருபணம் ஆகி உள்ளது. இதே போன்று பல மாநிலங்களிலும் பா.ஜனதா கட்சிக்கு எதிரான அலை வீசி வருவது உறுதியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அலை மாயமாகியுள்ளது. இது காங்கிரசின் புதிய தலைவர் ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி ஆகும். குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.