முதலமைச்சர் பழனிசாமி 
செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

67-வது பிறந்தநாள் கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பூங்கொத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், கலை ஆர்வம் மிக்கவராய் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். அரசியல், பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.