முதல்வர் பழனிசாமி 
செய்திகள்

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

நெல்லையில் மணிமுத்தாறு அணையிலிருந்து பாசன பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து நவம்பர் 13ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல் தொடர்ந்து 140 நாளுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். தண்ணீர் திறப்பதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT