செய்திகள்

டெல்லியில் முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் நாராயணசாமி பங்கேற்பு

சுஷ்மா சுவராஜ் தலைமையில் டெல்லியில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சினை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் நாராயணசாமி கலந்து கொண்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் டெல்லியில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பிரச்சினை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று அதிகாலை 4 மணியளவில் கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து 6 மணி விமானத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார்.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நாராயணசாமி காரைக்கால் மீனவர்கள் பிரச்சினை, அவர்களது படகுகளை மீட்பது, வெளிநாடுகளில் வாழும் புதுவை மக்களின் வேலை பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை மத்திய மந்திரிகளையும், காங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.