ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த முதல் மந்திரி ஹேமந்த் சோரன் 
செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்தித்தார்.

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த வாரம் பதவியேற்றார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்தித்தார். அப்போது அவரது மனைவி கல்பனா முர்மு சோரனும் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT