அரசு பஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த காட்சி. 
செய்திகள்

கழிப்பறை-படுக்கை வசதியுடன் அரசு விரைவு பஸ்கள்: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக போக்குவரத்துறைக்கு ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட 500 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.154 கோடி செலவில் 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்களின் வடிவமைப்புகளை பஸ்சுக்குள் ஏறிச் சென்றும் பார்த்தார்.

சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாற்று திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி உள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT