சென்னை:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த ராமையா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தென்தாமரைகுளம் நந்தகுமார் தெருவிளக்கை
சரிசெய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் தேவாலாவை சேர்ந்த விஜயலட்சுமி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம்
பெரியபாபுசமுத்திரம் சரோஜா, புல் அறுக்க சென்ற இடத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பூவற்றக்குடி சரகம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தென்மழையூர் கருப்பையா அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி விமல்காந்த் மின் கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டி
மின்பகிர்மான அலுவலகத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்த ரெங்கநாதன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது
மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் தெள்ளூர் மதுரா வீராரெட்டி பாளையம் மதியழகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் வடமங்கலம்
பார்த்தீபன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலியை சேர்ந்த மங்கள நாயகி மேல் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் மதுரா
வினாயகபுரம் வெங்கடேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கீரணத்தம் ராம்பிரசாத் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் சவுரிராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்த 14
பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.