முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் மறைவு- தமிழக முதலமைச்சர் இரங்கல்

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

டெல்லி ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:


ராம்விலாஸ் பஸ்வான் சமூக நீதிக்காகவும் ஏழ்மை நிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர்.

பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கேற்றவாறு வாழ்ந்தவர் பஸ்வான்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.