சேலம்:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்தை வருகிற 12-ந் தேதி சோனா பொறியியல் கல்லூரியில் வழங்குகிறார்.
இதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
சேலம் மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி அன்று சோனா பொறியியல் கல்லூ ரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சுமார் 500-க்கும் மேற்பட்ட, பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்க உள்ளார்கள்.
விழாவில் சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளின் மூலம் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 2000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆய்வில் பன்னீர்செல்வம் எம்.பி., சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ், மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.