செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜீவாதார பிரச்சினையான காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். #cauveryissue #edappadipalanisamy

சென்னை:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:- காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மத்திய அரசின் மனுவை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலக்கெடு முடிந்த பின் திட்டம் என்ன என மத்திய அரசு கேட்டிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது" 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #tamilnews #cauveryissue #edappadipalanisamy

SCROLL FOR NEXT