செய்திகள்

100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்: முதல்- அமைச்சர் பழனிசாமி பேச்சு

100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் என்று தாம்பரத்தில் அக்கட்சியின் 46வது ஆண்டு தொடக்க விழாவில் முதல்- அமைச்சர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க.வின் 46வது ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்பொழுது, எந்த துறைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது தமிழகம்.

227 தொடக்க பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 402 உயர் நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.