அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 
செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி மரணம்-எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களின் அன்பு மனைவி கண்ணாத்தாள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தினால் ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், கண்ணாத்தாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மனைவியை இழந்து வாடும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT