சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கேரளாவில் பாரிப்பள்ளிகொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த கணபதியின் மகன் முருகன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாலை விபத்தில், முத்து பலத்த காயமடைந்தார் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.