கோல்டுகோஸ்ட்:
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானு, சஞ்சிதா சானு ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் அறிவித்துள்ளார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு, 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இவர்கள் இருவரும் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானு, சஞ்சிதா சானு ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் அறிவித்துள்ளார். #CommonwealthGames2018 #SanjitaChanu #MirabaiBanu #BirenSingh