தீரன் சின்னமலை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் 
செய்திகள்

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மாலை மலர்

சென்னை:

சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் 214-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தீரன்  சின்னமலையின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு அமைச்சர்களும் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.