ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் குயின் டான் டிகாக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் கூறுகையில், டேவிட் வார்னரின் மனைவி குறித்து டிகாக் திட்டியதால் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் டேவிட் வார்னருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் டிகாக்குக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.