செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். #MilitantsAttack

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantsAttack

SCROLL FOR NEXT