செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படை - தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சூட்டில் டிரைவர் பலி

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி டிரைவர் ஒருவர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி டிரைவர் ஒருவர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தின்புரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த தாக்குதலில் அந்த பகுதியை கடந்து சென்ற அப்பாவி டிரைவர் ஆசிப் இக்பால் பட் குண்டுகள் பட்டு இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி டிரைவர் பலியானதற்கு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.